புத்தாண்டை ஒட்டி ஆனைக்கட்டி வனப்பகுதியில் உள்ள ரிசார்ட்டுகளில் அதிக ஒலியுடன் பாடல் போட்டு நடனமாடி விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் முறையீட்டை ஏற்று வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.
