ஆட்டோவை சரி செய்தபோது பைக் மோதி ஓட்டுநர் பலி

சோமனூர், ஜன.20: கருமத்தம்பட்டியில் பழுதான ஆட்டோவை சரி செய்து கொண்டிருந்தபோது பைக் மோதி ஓட்டுநர் பலியானார். ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (40) என்பவர் நேற்று முன்தினம் இரவு கருமத்தம்பட்டி மேம்பாலத்தில் ஆட்டோ ஓட்டி வந்தார். அப்போது, ஆட்டோவின் முன்பக்க டயர் பஞ்சர் ஆனதால் மேம்பால ஓரத்தில் நிறுத்திவிட்டு டயரை மாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த கோவை வி.கே. அரங்கநாதர் வீதியை சேர்ந்த கார்த்தி என்பவர் எதிர்பாராதவிதமாக பிரகாஷ் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கருமத்தம்பட்டி போலீசார், பிரகாஷ் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த கார்த்தியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>