×

தென்னாப்பிர்க்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்றதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த இந்திய அணி!

 

ஆமதாபாத்: தென்னாப்பிர்க்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்றதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது. சொந்த மண்ணில் தொடர்ச்சியாக அதிக டி20 தொடர்களை (9) வென்ற அணி என்ற புதிய சாதனையை படைத்தது இந்திய அணி. இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி போட்டி நேற்று ஆமதாபாத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 232 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது.

இந்திய தரப்பில் வருண் சக்ரவர்த்தி 4 விக்கெட்டுகளும், பும்ரா 2 விக்கெட்டுகளும், பாண்டியா மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர். இதனால், தென் ஆப்பிரிக்காவை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டி தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் ஏற்கனவே முன்னிலை வகித்த நிலையில், இந்த போட்டியில் பெற்ற வெற்றியால் தொடரையும் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், தென் ஆப்பிர்க்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்றதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது. சொந்த மண்ணில் தொடர்ச்சியாக அதிக டி20 தொடர்களை (9) வென்ற அணி என்ற புதிய சாதனையை படைத்தது இந்திய அணி. இந்தியா – 9* (2022 to 2025), ஆஸ்திரேலியா – 8 (2006-2010).

 

Tags : T20 ,South Africa ,AMADABAD ,
× RELATED நெல்லையில் பிரம்மாண்டமாக உருவாகி...