சமத்துவ பொங்கல் விழா

மேட்டுப்பாளையம், ஜன.20: காரமடை கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் சிக்கதாசம்பாளையம் சிராஜ் நகரில் சமத்துவ பொங்கல் மற்றும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி. கல்யாணசுந்தரம் தலைமையில் நடந்த விழாவில் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் புருஷோத்தமன், நகர செயலாளர் முகமது யூனிஸ், முனுசாமி, சிறுமுகை பேரூர் கழக செயலாளர் உதயகுமார், ரவிக்குமார், பிரேம் ஆனந்த், ஆலயம் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பொங்கல் விழாவில் தி.மு.க. மகளிர் அணியை சேர்ந்த கவிதா கல்யாணசுந்தரம், கிருஷ்ணவேணி புருஷோத்தமன், புஷ்பா ரவிச்சந்திரன், ரதி மனோகரன், சாந்தாமணி, சுமதி, மாலதி, கலைவாணி, ராணி, ராஜேஸ்வரி,  மகாலட்சுமி, தேன்மொழி, மகேஸ்வரி, அமுதா, நீதி மணி நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் பரிமாறப்பட்டது. அதன்பின், மக்கள் கிராம சபை கூட்டம் நடந்து.

Related Stories:

>