மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வாடகை செலுத்தாத 13 கடைகளுக்கு சீல்

கோவை,ஜன.20:கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மாநகராட்சி சொந்தமான வணிக வளாகங்கள் உள்ளன. இதில் உள்ள பல கடைகளின் உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு கடந்த 1 ஆண்டிற்கும் மேலாக வாடகை செலுத்தாமல் இருந்து வந்து உள்ளனர்.இதையடுத்து வாடகை செலுத்தாத கடைகளை பூட்டி சீல் வைக்க மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து கோவை மேற்கு மண்டல உதவி கமிஷனர் செந்தில் அரசன் முன்னிலையில் நேற்று மாநகராட்சி ஊழியர்கள் மருதமலை, டி.பி.ரோடு, கிருஷ்ணசாமி ரோடு, ஆரோக்கியசாமி ரோடு உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி வணிக வளாகத்தில் வாடகை செலுத்தாமல் செயல்பட்டு வந்த உணவகங்கள், பழக்கடை, டீக்கடை உள்பட 13 கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.

Related Stories:

>