×

ரூ.1.17 கோடி கஞ்சா திரவம் பறிமுதல்

திருச்சி, டிச.20: சுங்கத்துறை நடந்த அதிரடி சோதனையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.1.17 கோடி மதிப்புள்ள கஞ்சா திரவத்தை பறிமுதல் செய்தனர். திருச்சி சுங்கத்துறை தலைமையிட அலுவலகத்தின் கீழ் செயல்படும் ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து சுங்கத்துறையின் உளவுப்பிரிவு மற்றும் மண்டப பிரிவு இந்திய கடலோர காவல் படை இணைந்து நேற்று நடத்திய சோதனையின்போது கடலோரத்தில் சில சிறிய படகுகள் ஒதுங்கி ஆளின்றி நின்றது தெரிந்தது.

அதில் அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது அதில் 9 பாக்கெட்டுகளில் 9.400 கிலோ கஞ்சா கலந்த திரவம் (ஹாஷிஸ் எண்ணெய்) கடத்தி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து அதை கடத்தி வந்தவர்கள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட அந்த திரவத்தின் மதிப்பு ரூ.1.17 கோடி என தெரியவந்துள்ளது. அடுத்தக்கட்டமாக படிப்பட்ட அந்த கடத்தல் பொருட்கள் திருச்சி தலைமை சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதேபோல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Tags : Trichchi ,Customs ,Ramanathapuram district ,Trichy Customs ,
× RELATED செல்போன் பறித்த 2 வாலிபர் கைது