மதுரை, டிச. 20: அரசு அலுவலகங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, மதுரை கலெக்டர் அலுவலக அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மதுரை மாவட்ட குழு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் வேல் தேவா தலைமையில் வகித்தார். மாவட்ட தலைவர் செல்வா கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் இந்திய ஜனநாயக சங்கம் சார்பில் வேலை இல்லா பட்டதாரிகள், அரசு போட்டித் தேர்வுகளில் பங்கேற்க்கும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
