பள்ளிகளில் சுகாதார துறையினர் ஆய்வு

திருப்புவனம், ஜன.20: பத்து மாதங்களுக்கு பிறகு அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. 10 மற்றும் 12ம் வகுப்புகள் மாணவர்களுக்கு மட்டும் பள்ளியில் பாடம் நடத்தப்படுகிறது. திருப்புவனம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிகளில் சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்தனர். ஒவ்வொரு பள்ளியிலும் சானிட்டைசர் பாக்ஸ் வைக்கப்பட்டுள்ளது. அதனைப்பயன்படுத்திய பிறகே வகுப்புக்குள் செல்ல வேண்டும்.  ஒரு பெஞ்சில் இடைவெளி விட்டு இருவர் மட்டுமே உட்கார வேண்டும். மதியம் சாப்பிடும் போது அவரவர் சாப்பாட்டை மாட்டுமே சாப்பிடவேண்டும். மற்றவர் சாப்பாட்டை பங்கிட்டு சாப்பிடக் கூடாது என மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். சுகாதார துணை இயக்குநர் யசோதாமணி, வட்டார மருத்துவ அலுவலர் சேதுராமு உட்பட அலுவலர்கள் சென்றனர்.

Related Stories:

>