திருப்புத்தூர் அருகே ஐந்து ரோடு சந்திப்பில் அடிக்கடி விபத்து மின் விளக்கு அமைக்கப்படுமா?

திருப்புத்தூர், ஜன.20: திருப்புத்தூர் பகுதி வழியாக செல்லும் தேசிய நெஞ்சாலையின் ஐந்து ரோடு சந்திப்பு சாலையில் சோலார் விளக்குகள் அல்லது உயர் கோபுர விளக்குகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை திருப்புத்தூர் வழியாக செல்கிறது. இதில் பல முக்கிய ஊர்களுக்கு செல்லும் இணைப்பு ரோடுகள் உள்ளன. இதில் பெரும்பாலான இணைப்பு ரோடுகள் ஊருக்குள் செல்வதற்கு இரண்டு முதல் நான்கு கிலோ மீட்டருக்கு முன்னதாகவே தேசிய நெடுஞ்சாலையில் இருந்து இணைப்பு ரோடு வருகிறது. இதில் இணைப்பு ரோடுகளின் சந்திப்புகளில் ஊரின் பெயர் பலகைகளும் இல்லை.

திருப்புத்தூர் தென்மாபட்டி அருகே செல்லும் தேசிய நெடுஞ்சாலை இணைப்பு ரோட்டில் கண்டரமாணிக்கம், பட்டமங்கலம் ரோடு, வாணியங்காடு ரோடு, திருப்புத்தூர் ரோடு உள்ளிட்ட பல ஊர்களுக்கு செல்லும் ரோடுகள் செல்கிறது. இந்த இடத்தில் ஐந்து ரோடுகள் பிரிகின்றன.

ஆனால் இந்த இடத்தில் ஒரு விளக்குகள் கூட இல்லை. இதனால் விபத்துகள் ஏற்படுகிறது. இப்பகுதியில் நடந்த விபத்துகளால் சிலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் பகலில் சிறாவயல் மஞ்சுவிரட்டிற்கு டூவிலரில் வந்தவர்கள் நடந்து சென்றவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க இந்த ஜந்து ரோடு சந்திப்பில் உயர் மின்கோபுர விளக்கு அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முன்னாள் ஊராட்சி தலைவர் ஆறுமுகம் கூறுகையில், தென்மாபட்டி தம்மம் குளத்தில் இருந்து தெருவிளக்குகளும் இல்லாததால் அப்பகுதி முழுவதும் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் எந்த அசம்பாவிதம் நடந்தாலும் தெரியாது. எனவே இப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தவிர்க்க உயர் கோபுர விளக்குகள் அமைக்க வேண்டும் என கூறினார்.

Related Stories:

>