சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் பொதுமக்கள் வேண்டுகோள்

ஆர்.எஸ்.மங்கலம், ஜன.20: ஆர்.எஸ்.மங்கலம் அருகே புல்லமடையில் சுற்றுப்புற பகுதியினர் பயனடையும் வகையில், துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த துணை சுகாதார நிலைய கட்டிடம் கடந்த சில ஆண்டுகளாக சிமெண்ட் சிலாப்புகள் சேதமடைந்து, கட்டிடத்தின் மதில்களும் பலவீனமடைந்த நிலையில் உள்ளதால், தற்போது  ஊழியர்கள் தற்காலியமாக மாற்று கட்டிடத்தில் தங்கி பணியாற்றி வருகின்றனர். பல்வேறு கிராமங்களுக்கு மையப்பகுதியாக முக்கியத்துவம் வாய்ந்த இந்த துணை சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories:

>