×

ஆற்றுப்பகுதியில் ஆக்கிரமிப்பால் குடியிருப்பு பகுதியில் புகுந்த தண்ணீர்

தொண்டி, ஜன.20: தொண்டியில் மணிமுத்து ஆற்றுப்பகுதி பெரும்பாலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால், கடலுக்கு தண்ணீர் செல்ல முடியாமல் குடியிருப்பு பகுதியில் புகுந்துள்ளது. இதனால் பொது மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டியில் உள்ள மணிமுத்தாறு தண்ணீர் முழுவதும் எவ்வித தடையுமின்றி கடலுக்கு சென்றது. சில காலமாக இந்த ஆற்றின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக இப்பகுதியில் கன மழை பெய்தது. இதனால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கண்மாய் மற்றும் குளங்கள் நிறம்பி விட்டது. இதனால் உடைப்பு ஏற்படும் முன்பு திறந்து விடுவதால் தண்ணீர் முழுவதும் கடலை நோக்கி வருகிறது.

அவ்வாறு வரும் தண்ணீர் ஆற்றை கடக்க முடியாமல் தேங்கி அணீஸ் நகர், நரிக்குடி உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் உட்புகுந்துள்ளது. தண்ணீரை உடனடியாக அப்புறப்படுத்த பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேரூராட்சி நிர்வாகமும் நடவடிக்கையில் ஈடபட்டு வருகின்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறியது, ஆற்றில் தண்ணீரின் அளவு வழக்கத்தை விட அதிகமாக வருகிறது. மேலும் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளதால் தண்ணீர் செல்வதில் பிரச்னை ஏற்படுகிறது. இதனால் வீடுகளில் தண்ணீர் புகுந்து சிரமப்பட வேண்டியுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : area ,river ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...