யூனியன் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

சாயல்குடி, ஜன.20: முதுகுளத்தூர் யூனியன் அலுவலகம் சார்பில் சமத்துவ பொங்கல் நேற்று கொண்டாடப்பட்டது. முதுகுளத்தூர் யூனியன் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. சேர்மன் தர்மர் தலைமை வகித்தார். ஆணையாளர் சாவித்திரி, வட்டார வளர்ச்சி அலுவலர் மங்களேஸ்வரி முன்னிலை வகித்தனர். மேலாளர் சந்திரசேகர் வரவேற்றார். அலுவலகத்திலுள்ள விநாயகருக்கு பால், மஞ்சள், திருமஞ்சனப்பொடி, தேன், நெய், பன்னீர் உள்ளிட்ட 11 வகை அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. பிறகு அலுவலர்கள் சார்பில் சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டு, சமபந்தி விருந்து மற்றும் பொதுமக்களுக்கு கரும்பு வழங்கப்பட்டது. மேலாளர் பாலதண்டாயுதம் நன்றி கூறினார். கடலாடி அருகே உள்ள சாத்தங்குடியில் சார்பில் தேவர் சிலைக்கு அபிஷேகம் மற்றும் சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டது. மாணவர்கள், பொதுமக்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு,பரிசுகள் வழங்கப்பட்டது.

Related Stories:

>