மேலூர் அருகே மழையால் பதராக மாறிய நெற்பயிர்

மேலூர், ஜன.20:  மேலூர் பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக பல ஏக்கர் நெற்பயிர்கள் அழுகி உள்ளது. அத்துடன் நெற்பயிர்கள் வயலிலேயே சாய்ந்து மீண்டும் பல இடங்களில் முளைக்க துவங்கி உள்ளது. ஆனால் மேலூர் அருகில் உள்ள ஆமூர், உலகுபிச்சான்பட்டி பகுதியில் நெற்பயிர்கள், நெல்மணி பிடிக்காமல் வெங்கண்ணி எனப்படும் பதராக மாறி உள்ளது. இப்பகுதியை சேர்ந்த ஏலப்பன், முனியசாமி, நல்லம்மாள் உட்பட 10க்கும் மேற்பட்டவர்களின் வயலில் இப்படி பதராக மாறி உள்ளது. இவை வைக்கோலாக மட்டும் பயன்படும் நிலைக்கு சென்றுள்ளது. வேளாண் துறை, வருவாய் துறை அதிகாரிகள் இவற்றை பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>