வைகை தண்ணீரை பங்கீடுவதில் பிரச்னை இரண்டு கிராமமக்கள் அடுத்தடுத்து போராட்டம் ஒரு மணிநேரம் சாலைமறியலால் பரபரப்பு திருமங்கலம்/திருப்பரங்

குன்றம், ஜன.20: வைகை தண்ணீரை பங்கீடும் பிரச்சனையில் இரண்டு கிராமமக்கள் அடுத்தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பரங்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நெடுமதுரை மற்றும் கொம்பாடி கிராமங்கள் அடுத்தடுத்து உள்ளன. வைகையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் நிலையூர் கம்பிக்குடி கால்வாய் வழியாக நெடுமதுரை கிராமத்திலுள்ள கண்மாய்க்கு கடந்த 10 தினங்களுக்கு முன் வந்தது. இந்த கண்மாய் நிரம்பி அடுத்துள்ள புதுக்கண்மாய், கூடக்கோவில் கண்மாய், பெரியகூடக்கோவில் கண்மாய், மேலஉப்பிலிகுண்டு கண்மாய் மற்றும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கீழஉப்பிலிகுண்டு கண்மாய், கடம்மங்குளம் கண்மாய் செல்வது வழக்கம்.

இந்தாண்டு கொம்பாடி கிராமமக்கள் தங்களது கிராமத்திற்கு வைகை தண்ணீரை திறந்துவிடவேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இது சம்மந்தமாக அவர்கள் பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு கொடுத்த மனுக்களை தொடர்ந்து கால்வாய் மூலமாக கொம்பாடிக்கு தண்ணீர் திறக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அதிகாரிகளின் இந்த முடிவுக்கு நெடுமதுரை கிராமமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட கிராமமக்கள் திரண்டனர். தகவல் அறிந்த கூடக்கோவில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் போராட்டத்தை கைவிட்டனர்.  

இதனிடையே நிலையூர் கம்பிக்குடி கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி கொம்பாடி கிராமமக்கள் நேற்று மாலை திடீரென மதுரை-திருமங்கலம் ரிங் ரோட்டில் வலையங்குளம் டோல்கேட் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். டிஎஸ்பி வினோதினி, திருமங்கலம் ஆர்டிஓ சவுந்தர்யா, திருப்பரங்குன்றம் தாசில்தார் மூர்த்தி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் ஒரு மணிநேரம் போக்குவரத்து தடைபட்டது.

Related Stories:

>