×

வரும் 27ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

கரூர், டிச. 19: கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
கரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் 27.12.2025 அன்று தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், நடைபெறவுள்ளது.

இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில், உற்பத்தி துறை, ஜவுளித்துறை, இன்ஜினியரிங், கட்டுமானம், ஐ.டி துறை, ஆட்டோமொபைல்ஸ், விற்பனைத்துறை, மருத்துவம் சார்ந்த துறைகள் உள்ளிட்ட 200- க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்காக 10000-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப் படிப்பு, முதுகலை பட்டப் படிப்பு, தொழிற்கல்வி பயின்றவர்கள், செவிலியர்கள், பொறியியல் மாணவர்கள் என அனைத்து பிரிவினரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை.
இம்முகாமிற்கு வருகை புரியும் அனைத்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் தங்களது சுயவிவரம் மற்றும் கல்விச்சான்றுகளின் நகல்களுடன் கலந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இம்முகாமில் தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு பணிநியமன ஆணை உடனுக்குடன் வழங்கப்படும். இம்முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. மேலும், இம்முகாமில் கலந்துகொள்ள வேலைநாடுநர்களும், வேலையளிப்போரும் எந்தவிதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

அனுமதி முற்றிலும் இலவசம். வேலைநாடும் மனுதாரர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் விவரங்களை பதிவு செய்தல் வேண்டும். மேலும் விவரங்களுக்கு மனுதாரர்கள் 9345261136 மற்றும் 9159662342 என்ற தொலைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளவும். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து அவ்விணையதளத்தின் வாயிலாக இவ்வேலைவாய்ப்பு முகாமிற்கு விண்ணப்பித்தல் வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு வேலையளிப்போர் 9360557145 மற்றும் 7502025225 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும். இம்மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் வேலைதேடும் இளைஞர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெற்று பயனடையலாம்.

Tags : Karur ,District ,Collector ,Thangavel ,Karur District Administration ,District Employment and Career Guidance Center ,Tamil Nadu State Rural Urban Livelihood Movement ,
× RELATED கோரிக்கையை வலியுறுத்தி ஊராட்சித்துறை ஓய்வூதிய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்