×

தைப்பூச திருவிழா பழநியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை டிஐஜி ஆய்வு

பழநி, ஜன. 20:  பழநி கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தைப்பூசம் வரும் 22ம் தேதி துவங்க உள்ளது. இவ்விழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர். எனவே, பழநி பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து டிஐஜி முத்துச்சாமி நேற்று ஆய்வு செய்தார். இடும்பன் குளம், சண்முகநதி பகுதியில் தீயணைப்புத்துறையை சேர்ந்த நீச்சல் வீரர்களை கீழிறக்கி பார்த்தார்.    பல இடங்களில் பள்ளங்கள் இருந்ததால், நடுப்பகுதிக்கு பக்தர்கள் செல்லாத வகையில் தடுப்புகள் அமைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து முடிக்காணிக்கை மையம், தற்காலிக பஸ்நிலையம், தரிசன வழித்தடங்களில் ஆய்வு மேற்கொண்டார். ஒருவழிப்பாதையாக மாற்ற வேண்டிய இடங்களையும் பார்வையிட்டு கூட்ட மேலாண்மை குறித்து கோயில் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். ஆய்வின்போது ஏடிஎஸ்பி இனிக்கோ திவ்யன், டிஎஸ்பி சிவா உடனிருந்தனர்.

Tags : DIG ,Thaipusam Festival Palani ,
× RELATED மேற்கு வங்க டிஐஜி நீக்கம்: தேர்தல் ஆணையம் அதிரடி