×

கொடைக்கானல் அப்சர்வேட்டரி நீர்த்தேக்கத்தில் கிடப்பில் கிடக்கும் உபரி நீர் சேமிப்பு தடுப்பணை கட்டும் பணி எப்போது துவங்கும்?

கொடைக்கானல், ஜன. 20: கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வந்தது. இதன் காரணமாக கொடைக்கானல் மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய அப்சர்வேட்டரி நீர்த்தேக்கம், மனோரஞ்சிதம் நீர்த்தேக்கம் முழுவதுமாக நிரம்பி உள்ளது. இதில் அப்தர்வேட்டரி நீர்த்தேக்கம் தனது முழு கொள்ளளவான 22 அடியை எட்டியுள்ளதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதற்கிடையே இத்தண்ணீரை சேமிக்க மேலும் ஒரு தடுப்பணை கட்டப்படும் என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது வரை அதற்கான பணிகள் தொடங்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவி–்த்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘தொடர் மழையால் வெளியேறும் உபரி நீரை சேமித்தால் கோடைகாலத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்க்கலாம். எனவே நகராட்சி நிர்வாகம் தடுப்பணை கட்டும் பணியை உடனே துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். அருவிகளில் வெள்ளப்பெருக்கு தொடர்மழையால் கொடைக்கானலில் உள்ள அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளி நீர்வீழ்ச்சி, கரடி சோலை அருவி, வட்டக்கானல் அருவி, பேத்துப்பாறை அருவியில் தண்ணீர் விழும் அழகினை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

Tags : water storage dam ,Kodaikanal Observatory ,
× RELATED கொடைக்கானல் வானிலை ஆராய்ச்சி...