×

சின்னாளபட்டியில் உதவித்ெதாகை நிறுத்தப்பட்டதால் மீண்டும் வீதிக்கு வந்த மூதாட்டி கலெக்டர் கவனிப்பாரா?

சின்னாளபட்டி, ஜன. 20: சின்னாளபட்டி மேட்டுப்பட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில் முன்பு தெருவில் ஆதரவற்ற நிலையில் பாக்கியம்மாள் என்ற மூதாட்டி தங்கியிருந்தார். இதுகுறித்து தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி, பாக்கியம்மாளை முதியோர் காப்பகத்தில் சேர்க்க உத்தரவிட்டார். இதையடுத்து அதிகாரிகள், பாக்கியம்மாளை மீட்டு தனியார் முதியோர் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு 2 நாட்கள் மட்டுமே தங்கியிருந்த அவரை மற்றொரு தனியார் காப்பகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு பாக்கியம்மாளிடம், ‘உங்களுக்கு முதியோர் உதவித்தொகை வருகிறதா’ என கேட்டுள்ளனர். அதற்கு அவர் வரவில்லை என்றதும் காப்பகத்தை விட்டு வெளியே அனுப்பி விட்டனர். இதனால் பாக்கியம்மாள் மீண்டும் அதே இடத்தில் பிச்சையெடுத்து உயிர் வாழும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதுகுறித்து பாக்கியம்மாளிடம் கேட்டபோது, ‘கடந்த 4 மாதத்திற்கு முன்பு என்னை அதிகாரிகள் வக்கம்பட்டி அருகேயுள்ள காப்பகத்தில் சேர்த்தனர். அங்கு 2 நாட்கள் வைத்திருந்த பின் என்னை வேறொரு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். எனக்கு வந்து கொண்டிருந்த முதியார் உதவித்தொகை திடீரென வராமல் நின்று விட்டது. உடனே என்னை மீண்டும் பிச்சையெடுக்கும் நிலைமைக்கு அனுப்பி வைத்து விட்டனர். தமிழக அரசு இதுபோல் பலருக்கும் உதவித்தொகையை நிறுத்தி வருவதால், பல முதியோர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டாகும்’ என்றார்.

Tags : lady collector ,street ,Chinnalapatti ,
× RELATED சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும்