×

பிரபல கொள்ளையன் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

சேந்தமங்கலம், டிச.19: எருமப்பட்டி அடுத்த அலங்காநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் மகன் குமார். இவர் மீது எருமப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் மீது உள்ள அனைத்து வழக்குகளும், சேந்தமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் குமார் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, இம்மாதம் 31ம் தேதிக்குள் குமார் ஆஜராக வேண்டும். இல்லையென்றால் எருமப்பட்டி போலீசார் குமாரை கண்டுபிடித்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : Senthamangalam ,Selvam Makan Kumar ,Alanganatham ,Erumapatti ,Senthamangalam Criminal Magistrate’s Court… ,
× RELATED நாமக்கல் ரங்கநாதர் கோயிலில் திருப்பாவை பாராயணம்