சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழா

ஆட்டையாம்பட்டி, ஜன. 20:ஆட்டையாம்பட்டி  காவல் நிலையம் சார்பில், வீரபாண்டி ஏரி அருகே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழா  நடைபெற்றது. இதில்  நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் மோகன்ராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர்  ராஜாமணி, டிஎஸ்பி உமாசங்கர், இன்ஸ்பெக்டர்  குலசேகரன் ஆகியோர் கலந்துகொண்டு, பேசினர். சாலையோரம் விபத்துக்களை ஏற்படுத்தும் படியாக உள்ள, மரக்கிளைகளை அகற்ற வேண்டும். சாலையின் நடுவே  சென்டர் மீடியன் வைக்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இடைப்பாடி: இடைப்பாடி காவல் நிலையத்தின் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நாச்சியூர் கேட்டு கடையில் துவங்கிய விழிப்புணர்வு ஊர்வலத்துக்கு இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமை வகித்தார். 100க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் பொதுமக்கள், வெள்ளாண்டிவலசு, நைனாம்பட்டி பஸ் நிலையம் வழியாக டூவீலரில் ஊர்வலமாக சென்று ஹெல்மெட் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இளம்பிள்ளை: மகுடஞ்சாவடியில் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரன் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் 200க்கும் மேற்பட்டோர் டூவீலரில் ஹெல்மெட் அணிந்து நடுவனேரி, இளம்பிள்ளை சுற்றுவட்டார பகுதியில் ஊர்வலமாக சென்றனர்.

ஆத்தூர்:ஆத்தூரில் போக்குவரத்து துறை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஆத்தூர் டிஎஸ்பி இமானுவேல் ஞானசேகரன் துவக்கி வைத்தார். சாரதா ரவுண்டானாவில் துவங்கிய பேரணி பேருந்து நிலையம், ராணிப்பேட்டை கடைவீதி, அரசு பொது மருத்துவமனை, காமராஜர் சாலை வழியாக, மீண்டும் சாரதா ரவுண்டானாவில் நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்ற காவலர்கள், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர்.

Related Stories:

>