விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் இந்திய ராணுவ தின கருத்தரங்கம்

சேலம், ஜன. 20:  ஆண்டுதோறும் ஜனவரி 15ம்தேதி இந்திய ராணுவ தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில், இந்திய ராணுவ தின குறித்த இணையவழி கருத்தரங்கும் நடத்தப்பட்டது. துறையின் டீன் டாக்டர். செந்தில்குமார் முன்னிலை வகித்து வரவேற்புரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக இந்திய ராணுவத்தின் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கர்னல் சி.ஆர். சுந்தர் கலந்துகொண்டு, பேசினார். இந்த நிகழ்ச்சியில் துறையை சேர்ந்த மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ், இணையவழி மூலம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர். தனசேகர், வர்ஷினி மற்றும் அலுவலக நிர்வாக அதிகாரி கார்த்திகேயன் ஆகியோர் செய்திருந்தனர். ...

Related Stories:

>