செல்வமகள் சேமிப்பு திட்ட சிறப்பு முகாம்

சேலம், ஜன.20: சேலம் கிழக்கு தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் பஞ்சாபகேசன் விடுத்துள்ள செய்திகுறிப்பு: தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி கடந்த 11ம் தேதியில் இருந்து வரும் 24ம் தேதி வரை அனைத்து தபால் நிலையங்களிலும் செல்வமகள் சேமிப்பு திட்ட சிறப்பு முகாம் நடக்கிறது. சேலம் கிழக்கு கோட்டத்தில் உள்ள தபால்நிலையங்களில் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம். அதனால், இச்சேவையை பெற்றோர் பயன்படுத்தி, தங்களது பெண் குழந்தைகள் பெயரில் செல்வமகள் சேமிப்பை தொடங்கிட கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு முதுநிலை கண்காணிப்பாளர் பஞ்சாபகேசன் கூறியுள்ளார்.

Related Stories:

>