இளம்பிள்ளையில் அரசு பள்ளி திறப்பு

இளம்பிள்ளை, ஜன. 20: இளம்பிள்ளை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி  நேற்று திறக்கப்பட்டது. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர். பள்ளி நுழைவு வாயிலேயே ஆசிரியைகள் மாணவிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்ப பரிசோதனை செய்து உள்ளே அனுமதித்தனர். சமூக இடைவெளியுடன் அமர வைத்து பாடம் ஆசிரியைகள் பாடம் நடத்தினர். தலைமை ஆசிரியர் குழந்தைவேலு, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார். நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வரதராஜ் மற்றும்் ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.

Related Stories:

>