×

மாவட்டம் முழுவதும் பள்ளிகள் திறப்பு 60 சதவீத மாணவர்கள் வருகை கொரோனா தடுப்பு நடவடிக்கை கடைபிடிப்பு

நாமக்கல், ஜன.20: நாமக்கல் மாவட்டத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் 60 சதவீதம் பேர் பள்ளிக்கு வருகை புரிந்தனர். நாமக்கல் மாவட்டத்தில் நேற்று அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் திறக்கப்பட்டன. 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்பட்டது.சமூக இடைவெளியுடன் மாணவ,மாணவிகள் அமர வைக்கப்பட்டனர்.முதல் நாளான நேற்று, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்து பள்ளிகளிலும் பின்பற்றப்பட்டது. மாவட்ட கலெக்டர் மெகராஜ், முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன், மாவட்ட கல்வி அலுவலர் (பொ) சுப்பிரமணியன் ஆகியோர் பல்வேறு பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்தனர்.

மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வகை பள்ளிகளில் 10ம் வகுப்பில் 22,539 மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள்.இவர்களில் நேற்று 14,239 பேரும், பிளஸ் 2வில், 22,506 பேரில் 13,700 பேரும் நேற்று பள்ளிக்கு வந்திருந்தனர். மொத்தம் 60 சதவீத மாணவ, மாணவியர் நேற்று பள்ளிக்கு வந்திருந்தனர். தற்போது பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதால், அது தொடர்பான விபரங்களை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தெரிவித்தனர். ஒரு வாரம் மாணவ,மாணவியருக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் படி ஆசிரியர்களுக்கு, உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Schools ,district ,
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...