×

திருச்செங்கோடு கூட்டுறவு சங்கத்தில் ₹6 லட்சத்திற்கு எள், பருத்தி விற்பனை

திருச்செங்கோடு, ஜன. 20: திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில்,வாராந்திர எள் விற்பனை ரகசிய டெண்டர் முறையில் நேற்று நடந்தது. சின்னசேலம், ஆத்தூர், கெங்கவல்லி, காங்கேயம், பரமத்தி, நாமக்கல், ராசிபுரம், வீரகனூர், தம்மம்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து விவசாயிகள் 100 மூட்டை எள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இவற்றை வாங்க பவானி, அனுமன்பள்ளி, முத்தூர், காங்கேயம், திருப்பூர், திருச்செங்கோடு, சங்ககிரி,ஈரோடு பகுதிகளைச்  சேர்ந்த வியாபாரிகள் வந்தனர். ரகசிய டெண்டர் முறையில் இந்த எள் ₹4 லட்சத்திற்கு விற்பனையானது. சிவப்பு எள் ₹82.40 முதல் ₹94 வரை விற்றது. வெள்ளை எள் ₹70.10 முதல் 90 வரை விற்றது.கருப்பு எள் ₹82.40 முதல் 94 வரை விற்பனையானது.  அதேபோல் 100 மூட்டை பருத்தி ₹2 லட்சத்திற்கு விற்பனையானது. பருத்தி ரகங்களை முசிறி புதுப்பட்டி,வடக்கு நல்லியம்பட்டி,தெற்கு நல்லியம்பட்டி, தண்டலை, திருத்தலையூர், சேங்கணம், ராசிபுரம், கதிரா நல்லூர் , புதுச்சத்திரம், துறையூர், அம்மம்பாளையம், மருவத்தூர் போன்ற பகுதிகளிலிருந்து விவசாயிகள்  கொண்டு வந்தனர். பிடி காட்டன்  குவிண்டால் ₹5222  முதல் ₹6266 வரை விலை போனது. 

Tags : Tiruchengode Co-operative Society ,
× RELATED திருச்செங்கோடு கூட்டுறவு சங்கத்தில்...