வெட்டிய மரங்களுக்கு அஞ்சலி

ராசிபுரம்,ஜன.20: ராசிபுரம் அண்ணாசாலை அரசு மேல்நிலைப் பள்ளியில், விளையாட்டு மைதானதம் அமைந்துள்ளது.இந்த மைதானத்தையொட்டி பல்வேறு மரங்கள் வளர்ந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் சிலர் விளையாட்டு மைதானத்தில் உள்ள மரங்களை வெட்டி, ஆட்டோவில் எடுத்து சென்றனர். இது குறித்து பல்வேறு அமைப்பினர் ராசிபுரம் போலீசில் புகார் மனு அளித்தனர். இதனை தொடர்ந்து நேற்று மரங்கள் வெட்டி, ஆட்டோவில் எடுத்துச் சென்றவர்கள் மீது நடவடிக்கைக்கோரி, வெட்டப்பட்ட மரங்களுக்கு அஞ்சலி செலுத்தி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நூதன போராட்டத்திற்கு தமிழக மக்கள் தன்னுரிமை கட்சி நிறுவனத் தலைவர் நல்வினை செல்வன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் மணிமாறன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் நீல வானத்து நிலவன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நகர தலைவர் பவர் மஸ்தான், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட தலைவர் கண்ணன், திராவிடர் விடுதலை கழக நகர செயலாளர் சேகுவாரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>