ராசிபுரம் அரசு கல்லூரியில் திருவள்ளுவர் தினவிழா

ராசிபுரம், ஜன.20: திருவள்ளுவர்  தினத்தையொட்டி, ராசிபுரம் அடுத்த ஆண்டகளூர்கேட்  திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில், முன்னாள் மாணவர் சங்கத்தின் திருவள்ளுவர் அறக்கட்டளை சார்பில் 32வது ஆண்டாக திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது. முதல்வர் மணிமேகலை தலைமை வகித்தார். அரசியல்  அறிவியல் துறைத்தலைவர் பேராசிரியர் சிவக்குமார் வரவேற்றார். முன்னாள் மாணவரும், அண்ணாமலை  பல்கலைக்கழக துணை தேர்வு கட்டுப்பாட்டு அலுவருமான பேராசிரியர் சக்திவேல்,  சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். முன்னதாக அலங்கரிக்கப்பட்ட  திருவள்ளுவர் சிலை மற்றும் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மரியாதை  செலுத்தினர். உதவி  பேராசிரியர்கள் துரைசாமி, முத்துக்குமார், நாமக்கல் மாவட்ட அரசு பள்ளிகளின் ஆய்வாளர் பெரியசாமி,  வழக்கறிஞர் சக்திவேல், தலைமையாசிரியர் சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>