ஓசூரில் திமுக ஆலோசனை கூட்டம்

ஓசூர், ஜன.20:திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஓசூர் ரயில் நிலைய சாலையில் உள்ள மீரா மகாலில் நடந்தது. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் தளி பிரகாஷ் எம்எல்ஏ தலைமை வகித்தார். சத்யா எம்எல்ஏ வரவேற்றார். வேப்பனஹள்ளி எம்எல்ஏ முருகன், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், முனிராமைய்யா, ஒன்றிய செயலாளர்கள் சின்னப்பில்லப்பா, நாகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார் தீர்மானங்களை வாசித்தார்.இதில், ஓசூர் உழவர் சந்தையை திறக்க வலியுறுத்தி விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்துவது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் நிகழ்ச்சி வரும் 23ம் தேதி ஓசூர் தொகுதியில் நடக்கிறது. இந்நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாவட்ட இளைஞரணி சீனிவாசன், இலக்கிய அணி எல்லோராமணி, கோபாலகிருஷ்ணன், ராஜா, கருணாநிதி, நாகராஜ், திம்மராஜ், சென்னீரப்பா, குருசாமி, மாதேஷ்வரன், நடேசன், சுமன், ரவி, கௌரி குருநாதன், ராஜேந்திரன், மகேஷ்பாபு, சேகர், ரவிகுமார், அருணா பூசன்குமார், சுனந்தா சுந்தர்ராஜ், சாந்தி, தனலட்சுமி, சுரேஷ், வெங்கடரமணப்பா, நாகராஜ், சம்பத்குமார், கஜேந்திரமூர்த்தி, வெங்கடசாமி, ஹரிபிரசாத், சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>