திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தேன்கனிக்கோட்டை, ஜன.20: தேன்கனிக்கோட்டை  பேரூர் திமுக அலுவலகத்தில் தளி தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் தளி பிரகாஷ்  எம்எல்ஏ தலைமை வகித்தார். தேன்கனிக்கோட்டை பேரூர் செயலாளர் சீனிவாசன்  வரவேற்றார். ஓசூர் மாநகர பொறுப்பாளர் சத்யா, தளி ஒன்றிய குழு தலைவர்  சீனிவாசலுரெட்டி, தெற்கு ஒன்றிய செயலாளர் திவாகர், கெலமங்கலம் ஒன்றிய  பொறுப்பாளர் கணேசன், அஞ்செட்டி ஒன்றிய பொறுப்பாளர் நாகன், கெலமங்கலம்  பேரூர் பொறுப்பாளர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில்  வரும் 24ம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்சியை தளி  தொகுதியில் சிறப்பாக நடத்துவது குறித்து பிரகாஷ் எம்எல்ஏ பேசினார்.  நிகழ்ச்சியில், அணிகளிண் அமைப்பாளர்கள் சீனிவாசன், அருணா பூசன், சின்னராஜ்,  ராஜா, ஸ்ரீதர், ரவீந்திரநாத், ரவி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து  கொண்டனர்.

Related Stories:

>