ஒருவருக்கு கொரோனா

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். நேற்று ஒரேநாளில் 5பேர் குணமாகி வீட்டிற்கு சென்றனர். மொத்தம் 37பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 54பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

குழந்தையுடன் இளம்பெண் மாயம்

தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் திப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ், கூலி தொழிலாளி. இவரது மனைவி மாலதி (25). இவர் அதேப்பகுதியில் உள்ள பட்டு நூற்பாலையில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 14ம் தேதி கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மாலதி மனவேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில், மறுநாள் காலை தூங்கி எழுந்தபோது, வீட்டில் மாலதியையும், 2வயது மகன் தர்ஷனையும் காணவில்லை. தங்கராஜ் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் கிருஷ்ணாபுரம் போலீசில் புகார் அளித்தார்.

விபத்தில் மாணவன் பலி

பென்னாகரம் அடுத்த நெக்குந்தி பகுதியை சேர்ந்தவர் சின்னப்பையன் மகன் பூவரசு(18).தர்மபுரி அரசு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த 17ம் தேதி டூவீலருக்கு பெட்ரோல் போடுவதற்காக, பென்னாகத்திற்கு சென்றார்.அப்போது எதிரே வந்த கார் மோதி, பூவரசு படுகாயமடைந்தார். உறவினர்கள் அவரை மீட்டு, பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பூவரசு உயிரிழந்தார்.விபத்து குறித்து பென்னாகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

மாணவிகள் மாயம்

பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த  மெணசி ஜீவா நகரை சேர்ந்தவர் முருகேசன் மகள் மகாலட்சுமி(19). இவர், சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 17ம் தேதி வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, முருகேசன் அளித்த புகாரின்பேரில் பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.இதேபோல், தர்மபுரி மாவட்டம், மதிகோன்பாளையம் பெரிய மல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் அகிலா(16). கடந்த 10ம் தேதி கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில்,  மதிகோன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories:

>