கடத்தூர் அருகே இருதரப்பு மோதல்

கடத்தூர், ஜன.20: தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே ராமியனஅள்ளி ஏரி உள்ளது. நேற்று இரவு அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் 4பேர் ஏரி கரையோரத்தில் மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு தரப்பினர், இப்பகுதியில் மது அருந்த கூடாது என கூறியுள்ளனர். அப்போது இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஒருதரப்பை சேர்ந்த இளைஞர்கள், தங்களது ஊருக்கு சென்று தங்களை தாக்க வருவதாக கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கும்பல், ராமியனஅள்ளி காலனி பகுதிக்கு சென்றனர்.அப்போது கண்ணில் பட்ட நபர்களை, கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.இதில், இதில், 2பெண் உள்பட 8பேரின் மண்டை உடைந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த, கோபிநாதம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இருதரப்பையும் சமாதானம் செய்தனர். பின்னர் காயமடைந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சகை–்காக அனுமதித்தனர். இருதரப்பு மோதல் காரணமாக, 50க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் ேநற்று இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: