திருவள்ளுவர் தினம் கடைபிடிப்பு

தர்மபுரி, ஜன.20: அரூர் எஸ்.பட்டி வள்ளுவர்புரம், பாப்பிரெட்டிப்பட்டி சி.தொப்பம்பட்டி கிராமத்தில் வசிக்கும் திருவள்ளுவர் வம்சாவளி வந்த வள்ளுவர் சமூகத்தை சார்ந்த மக்கள், திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, திருவள்ளுவர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், 105பெண்களுக்கு தர்மபுரி திருவள்ளுவர் மக்கள் ஒருங்கிணைப்பு குழு தலைவரும் ஓய்வு பெற்ற விஏவுமான சுபயோகம், செயலாளர் திருமால் ஆகியோர் புத்தாடை வழங்கினர். இதில், ஒருங்கிணைப்பாளர்கள் வைத்தியலிங்கம், ஜெகதீசன், சுப்பிரமணி, பாவலர் நொச்சிப்பூந்தளிரான், விஜயரங்கம்,  சிவசுந்தரம், ஞானவேல், குப்பு சுப்பிரமணி, சந்திர சுதாகர், மோகன்,  முத்துகிருஷ்ணன், சுதாகர், செந்தில்குமார், ரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ...

Related Stories:

>