×

புகழூர் பகுதியில் ஏழைகளுக்கு இலவச மனைப்பட்டா செந்தில்பாலாஜி இன்று வழங்குகிறார்

வேலாயுதம்பாளையம், டிச. 18: புகழூரில் ஏழைகளுக்கு இலவச பட்டா செந்தில் பாலாஜி வழங்குகிறார்.
புகலூர் நகராட்சி புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்த பொதுமக்கள் பட்டா இல்லாமல் இதுவரை சிரமப்பட்டு வந்தனர். இதுகுறித்து மாவட்ட கழகச்செயலாளர் வி.செந்தில் பாலாஜி எம்எல்ஏயிடம் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, நகராட்சி தலைவர் குணசேகரன் குடியிருக்கும் பொதுமக்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தினர். இதன் அடிப்படையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி இன்று 18ஆம் தேதி காலை 9 மணிக்கு ஏழை எளிய மக்களுக்கு பட்டா வழங்கப்படுகிறது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமை தாங்குகிறார். சிறப்பு அழைப்பாளரான மாவட்ட கழக செயலாளர் வி செந்தில் பாலாஜி எம்எல்ஏ இலவச பட்டா வழங்கிய சிறப்புரையாற்றுகிறார். மாநில, மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள், நகர கழக நிர்வாகிகள், மண்டல பொறுப்பாளர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், வார்டு கழக செயலாளர்கள், நகர கழக அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், நகர கழக செயற்குழு உறுப்பினர்கள், வார்டு கழக நிர்வாகிகள், பூத்கமிட்டி உறுப்பினர்கள், பூத் ஐடி விங்க் ஒருங்கிணைப்பாளர்கள், இளைஞரணி அமைப்பாளர்கள், மகளிரணி அமைப்பாளர்கள், வார்டு கழக இளைஞரணி, மகளிரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொள்ளும்படி புகலூர் நகராட்சி தலைவரும் நகர செயலாளர் குணசேகரன் தெரிவித்துள்ளார்.

Tags : Senthil Balaji ,Pugalur ,Velayudhampalayam ,Pugazhimalai Balasubramania Swamy Temple ,Pugalur Municipality ,
× RELATED அதிகாரிகள் அதிரடி நில மேலாண்மை சுண்ணாம்புச்சத்து அதிகரிக்க ஆலோசனை