×

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மீன் தீவனம் தயாரித்தல் பயிற்சி ஜன.21,22ல் நடக்கிறது

தூத்துக்குடி, ஜன. 20:தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி முதல்வர் சுந்தரமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு, தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் “பண்ணை சார்ந்த மீன் தீவனம் தயாரித்தல” பற்றிய ஒருநாள் உள் வளாக பயிற்சி ஜன.21ம், இணையதள வழியாக 22ம்தேதியும் வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் மீனுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள், மீன் தீவனம் தயாரிக்க தேவையான தாவர, விலங்கின மூலப்பொருட்கள் தேர்ந்தெடுத்தல், அரைத்தல், மீன் தீவனம் பிழிந்தெடுக்க பயன்படும் கருவிகள், மிதவை, மூழ்கும் மீன்தீவனம் தயாரித்தல், காய வைத்தல், மீன் தீவன தரக்கட்டுப்பாடு, உற்பத்தி செலவின கணக்கீடு ஆகிய தலைப்புகளில் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் ரூ.300 செலுத்தி பதிவு செய்யவேண்டும். பயிற்சியின் முடிவில் பயிற்சியாளர்களின் சான்றிதழ், பயிற்சி கையேடு மின்அஞ்சல் வழியாக அனுப்பப்படும்.விருப்பமுள்ள தொழில் முனைவோர், இதர நபர்கள் ஜன.20ம்தேதி மாலை 5 மணிக்குள் பேராசிரியர் மற்றும் தலைவர், மீன் வளர்ப்புத்துறை, மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடி-628008 அல்லது 09442288850 athithan@tnfu.ac.in. என்ற முகவரிக்கு அனுப்பலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Tags : Thoothukudi Fisheries College ,
× RELATED தூத்துக்குடி தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் மாணவர் பேரவை துவக்க விழா