×

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் நாளை கனிமொழி எம்பி பிரசார பயணம் கீதாஜீவன் எம்எல்ஏ அறிக்கை

தூத்துக்குடி, ஜன.20:தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் நாளை 21ம்தேதி கனிமொழி எம்பி பிரசார பயணம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதா ஜீவன் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு இணங்க தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் நாளை (21ம்தேதி) “விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்” எனும் பிரசார பயணம் நடைபெறுகிறது. இதில் மாநில மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி பங்கேற்கிறார். அதன்படி 21ம்தேதி காலை 9 மணிக்கு தூத்துக்குடி தொகுதியில் மருத்துவ முகாம்களை துவக்கி வைத்தல். 10மணிக்கு கலைஞர் அரங்கத்தில் தூத்துக்குடி தொகுதி பாக பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம், 10.30மணி தூத்துக்குடி தெற்கு ராஜாதெருவில் அகில இந்திய தொழில் வர்த்தக சங்கத்தில் புதிய ஆடிட்டோரியம் திறப்புவிழா, 11.30 மணிக்கு எட்டயபுரம் பாரதியார் இல்லத்தில் மரியாதை செலுத்துதல், மதியம் 12 மணிக்கு கோவில்பட்டியில் தொகுதி பாக பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம், மதியம் 1 மணிக்கு வள்ளுவர்நகரில் கடலை தொழிலாளர்களுடன் சந்திப்பு, மாலை 3மணிக்கு மந்திதோப்பில் திருநங்கைகள் நிர்வகிக்கும் பால்பண்ணை பார்வையிடல், 3.30 மணிக்கு ஹாக்கி வீரர்களுடன் சந்திப்பு, 4.30 மணிக்கு வானரமுட்டியில் வேன் பிரசாரம், 4.45 மணிக்கு வானரமுட்டியில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி வீட்டுக்குசெல்லுதல்,  5.30 மணிக்கு கடம்பூர் பேரூரில் மக்கள் சபைக்கூட்டம், 6.15 மணிக்கு பசுவந்தனையில் வரவேற்பு, 6.45 மணிக்கு கீழஈராலில் திமுக முன்னோடி அ.கோ.சி.தங்கபாண்டியன் வீடு செல்லுதல், இரவு 7மணிக்கு விவசாயிகளுடன் சந்திப்பு, 7.30 மணிக்கு பொதுமக்கள் சந்திப்பு, 8மணிக்கு எட்டயபுரத்தில் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சிகளில் திமுக நிர்வாகிகளும் பொதுமக்களும் பங்கேற்க வேண்டுகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : Kanimozhi MP ,campaign trip ,district ,Thoothukudi North ,Geethajeevan MLA ,
× RELATED பாஜ, அதிமுக ஸ்டிக்கர் கட்சிகள்...