×

மோடி அரசு ஒவ்வொரு துறையிலும் ஏகபோகத்தை உருவாக்குகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது வாட்ஸ்அப் சேனலில் பதிவிட்டுள்ளதாவது:
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் போது சிறு மற்றும் நடுத்தர ஐஸ்கிரீம் உற்பத்தியாளர்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டேன். அப்போது தான் அரசு தனக்கு சாதகமாக உள்ள தொழிலதிபர்களின் நலனுக்காக சிறு வணிகங்களை அழிக்க தீர்மானித்துள்ளது என்பது தெரிந்தது.

ஏகபோகம் அல்லது இரட்டை ஆட்சி இந்தியாவுக்கு ஒரு சாபக்கேடு.மோடி அரசாங்கம் இதை ஒவ்வொரு துறையிலும் இதை செய்து வருகிறது. ஐஸ்கிரீம் உற்பத்தியாளர்களின் வாடிக்கையாளர்கள் இந்தியாவின் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள்.இந்த சிறு வணிகங்களுக்கு ஜிஎஸ்டி மிகவும் சிக்கலானது. இதனால்தான் சிறு வணிகங்களுக்கு ஒரு சிறப்பு ‘கலவைத் திட்டம்’ உருவாக்கப்பட்டது. ஆனால் பாஜ அரசு வேண்டுமென்றே இந்தத் திட்டத்திலிருந்து ஐஸ்கிரீமை விலக்கியது.

அதே நேரத்தில், பாஜ ஆளும் மாநிலங்களும் உள்ளாட்சி அமைப்புகளும் கட்டணங்களை கடுமையாக அதிகரித்துள்ளன.இந்தக் கதை ஒவ்வொரு துறையிலும் மீண்டும் மீண்டும் வருகிறது. பாஜவுக்கு நிதியளிக்கும் பிரதமரின் விருப்பமான ஏகபோகவாதிகள் மட்டுமே தப்பிப்பிழைக்கின்றனர்.அதற்கு ஈடாக, அவர்கள் சந்தையில் முழுமையான ஏகபோகத்தைப் பெறுகிறார்கள் என்றார்.

Tags : Modi ,Rahul Gandhi ,New Delhi ,WhatsApp ,
× RELATED இன்று அமாவாசை என்பதால் அதிமுகவில்...