8 பேருக்கு `கொரோனா’

நெல்லை, ஜன. 20: நெல்லையில் நேற்று காலை வெளியான கொரோனா பரிசோதனை முடிவில் நெல்லை மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. இதில் 5 பேர் மாநகர பகுதியை சேர்ந்தவர்கள். மாநகரில் அன்புநகர், சித்திவிநாயகர் கோயில் தெரு, பெருமாள்புரம், ரகுமத்நகர் ஆகிய பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வட்டார அளவில் அம்பையில் 2 பேருக்கும் சேரன்மகாதேவியில் ஒருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. மானூர், நாங்குநேரி, பாளை, பாப்பாக்குடி, ராதாபுரம், வள்ளியூர், களக்காடு ஆகிய வட்டாரங்களில்  தொற்று பாதிப்பு இல்ைல.

Related Stories:

>