×

நெல்லையில் பள்ளி, வீடுகளில் புகுந்த பாம்புகள் பிடிபட்டன

நெல்லை,ஜன.20: நெல்லையில் பள்ளி, வீடுகளில் புகுந்த பாம்புகளை பாளை தீயணைப்பு நிலைய வீரர்கள் பிடித்து காட்டுபகுதியில் விட்டனர். நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் வகுப்பறை அருகே பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதை கண்ட ஆசிரியர்கள் பதற்றம் அடைந்தனர். இதுபோல் சந்திப்பு பாலபாக்கியா நகரில் ஒரு வீட்டில் நல்ல பாம்பு பதுங்கி இருந்ததை வீட்டில் உள்ளவர்கள் பார்த்தனர். இதுகுறித்து பாளை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து பள்ளியில் பதுங்கி இருந்த கண்ணாடி விரியன் பாம்பையும், பாலபாக்யா நகரில் வீட்டில் பதுங்கி இருந்த நல்ல பாம்பையும் பிடித்தனர். இதைதொடர்ந்து இரு பாம்புகளையும் காட்டுப்பகுதியில் கொண்டு விட்டனர்.

பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை: இதுகுறித்து நிலைய அலுவலர் வீரராஜ் தெரிவிக்கையில்; நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக பருவமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அணைகளில் நீர்மட்டம் அதிகரித்ததால் உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டதால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதன்காரணமாக வெள்ள நீரில் பாம்புகள் அடித்து வரப்பட்டு அங்காங்கே தஞ்சமடைந்திருக்கும். பாம்புகளை கண்டு பொதுமக்கள் பீதியடைய வேண்டாம். அருகில் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தால் போதும். தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து பாம்பினை பிடித்து காட்டு பகுதியில் கொண்டு விட்டுவிடுவர் என தெரிவித்துள்ளார்.

Tags : Nellai ,houses ,schools ,
× RELATED நெல்லை மக்களவை தொகுதி பாஜ, அதிமுக வேட்பாளர்கள் சொத்து பட்டியல்