செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் வருஷாபிஷேகம்

நெல்லை,ஜன.20: நெல்லை ராஜவல்லிபுரம் கிராமத்தில் அமைந்துள்ள செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் வருஷாபிஷேக விழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நெல்லை ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் வருஷாபிஷேக விழாவையொட்டி நேற்று காலை 8 மணிக்கு விநாயகர் வழிபாடு, கும்ப ஸ்தாபனம், சிறப்பு ஹோமம் நடந்தது. இதைத்தொடர்ந்து காலை 10.30 மணி முதல் 11 மணிக்குள் தாமிரசபை, சுவாமி, அம்பாள், விமானங்களுக்கு வருஷாபிஷேகம் நடந்தது. பின்னர் 11 மணிக்கு மேல் அழகிய கூத்தர் பெருமானுக்கு வருஷாபிஷேகம் நடந்தது. இதைதொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை இடம் பெற்றது. பின்னர் அழகிய கூத்தர் விழா மண்டத்தில் இருந்து தாமிரசபைக்கு எழுந்தருளி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories:

>