9ம் வகுப்பு மாணவிக்கு பிறந்த குழந்தை சாவு

கேடிசி நகர், ஜன. 20: நெல்லை தச்சநல்லூரைச் சேர்ந்தவர் தேவராஜ் (47). கூலி தொழிலாளி. இவர் 9ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்ததால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளை சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக அந்த 9ம் வகுப்பு மாணவி, களக்காடு காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கடந்த நவ.11ம் தேதி குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு திடீரென்று உடல் நலம் சரியில்லாததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்தது. இதுகுறித்து நெல்லை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.

Related Stories:

>