பள்ளியில் கலெக்டர் ஆய்வு நெல்லை மாவட்டத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் நேற்று உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு கருத்து கண்காட்சி

நெல்லை, ஜன.20:  கூட்டு பண்ணைய திட்டத்தின் கீழ் உழவர் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள், வேளாண் இயந்திரங்கள் விற்பனை பிரதிநிதிகளுக்கான கூட்டம் மற்றும் கருத்து கண்காட்சி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கூட்டுபண்ணைய திட்டம் தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வேளாண்மைத்துறை மூலம் நடப்பு ஆண்டில் 125 உழவர் ஆர்வலர் குழுக்கள், 25 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தோட்டக்கலைத்துறை மூலம் 40 உழவர் ஆர்வலர் குழுக்கள், 4 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாண்டு உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு, ஒரு குழுவுக்கு 5 லட்சம் வீதம் பண்ணை இயந்திரங்கள் வாங்கிட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் 25 குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வீதம் ரூ.1.25 கோடி நிதியை கலெக்டர் விஷ்ணு வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில் வேளாண் துறை இணை இயக்குனர் கஜேந்திர பாண்டியன், துணை இயக்குனர்கள் அசோக்குமார், டென்னிசன்(உழவர் பயிற்சி) சுந்தர் டேனியல் பாலன், பாலசுப்பிரமணியன்(நுண்ணீர் பாசனம்) மற்றும் வேளாண், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர்கள், வட்டார அலுவலர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் தங்களுக்கு தேவையான பண்ணை இயந்திரங்களை தேர்வு செய்திட வேளாண் கருவிகள் கண்காட்சியும் நடந்தது.

Related Stories:

>