பைக்கில் மணல் கடத்தல்; 2 பேர் கைது

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த சீமாபுரம் பகுதியில் உள்ள ஆற்றில் இருந்து, இரவு நேரங்களில்  மணல் கடத்தப்படுவதாக எஸ்பி அரவிந்தனுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அவரது உத்தரவின்படி, பொன்னேரி டிஎஸ்பி கல்பனா தத் மேற்பார்வையில், மீஞ்சூர் இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன், எஸ்ஐ மாரிமுத்து ஆகியோர் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம், மேற்கண்ட பகுதிக்கு சென்று  தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, சீமாபுரம் ஆற்றுப்பகுதியில் இருந்து அதிகாலை நேரத்தில், பைக்கில் மணல் மூட்டைகளை கட்டி கொண்டு 2 பேர் வந்தனர். அவர்கள், போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர். உடனே போலீசார், அவர்களை மடக்கி பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். விசாரணையில், சீமாபுரத்தை சேர்ந்த சங்கர் (30), சிவா (32) என தெரிந்தது. அவர்களிடம் இருந்து மணல் மூட்டைகள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். பின்னர், வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>