10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறப்பு

திருப்பூர், ஜன. 19: 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளி துவங்க உள்ள நிலையில், திருப்பூரில் உள்ள அரசு பள்ளிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் இன்று 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளி, வளாகம், வகுப்பறை, மைதானம் உள்ளிட்ட இடங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறை குறித்து பள்ளிகளுக்கு சுகாதாரத்துறை சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதனை பின்பற்றி 25 மாணவர் மட்டும் அமரும் வகையில் வகுப்புகளில் இருக்கை மாற்றப்பட்டுள்ளது. நுழைவு வாயிலில் சானிடைசர் வைக்கப்படுகிறது. மாணவர் முககவசம் அணிந்து வருவதை உறுதி செய்ய ஆசிரியர் ஒருவர் வாயிலில் பணி அமர்த்தப்படுகிறார். குழந்தைகளை பள்ளிக்குள் அழைத்து வந்து விட, கூட்டி செல்ல பெற்றோருக்கு அனுமதியில்லை. மதிய உணவு இடைவேளை, விளையாட்டு பிரிவு நேரங்களில் மாணவர் ஒன்று கூட அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பிளஸ்-2 மொழிப்பாடம் மற்றும் முக்கிய பாடங்களுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டம் (‘சிலபஸ்’) அரசால் வெளியிடப்பட்டது. இதனை அடிப்படையாக கொண்டே இன்று (19ம் தேதி) வகுப்பு நடக்கும். திருப்பூர் மாவட்டத்தில், பள்ளிகள் திறப்பதற்கு ஆயத்தமாகியுள்ளன. அதன்படி, நேற்று பள்ளி வளாகங்கள் மற்றும் வகுப்பறைகளில் கிருமிநாசி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டன.

Related Stories:

>