×

மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தை கலெக்டர் தலைமையில் நடத்த கோரிக்கை

ஊட்டி,ஜன.19: நீலகிரி தொகுதி மக்கள் இயக்கத்தின் தலைவர் ராஜ், மாவட்ட கலெக்டருக்கு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, நீலகிரி மாவட்டத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடந்து வந்தது. இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கலந்துக் கொண்டு பொதுமக்களிடம் குறைகளை நேரடியாக கேட்பார். பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது பிரச்னைகளை மனுக்கள் மூலம் தெரிவிப்பது மட்டுமின்றி, நேரடியாகவும் கலெக்டரிடம் தெரிவித்து வந்தனர். விசாரணை மேற்கொள்ளும் கலெக்டர் உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனுக்களை அளித்து பிரச்னைகளை களைய முற்படுவார்.
ஆனால், கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் நடத்தப்படுவதில்லை. இதனால், மக்கள் தங்களது குறைகளை தெரிவிக்க முடியாமல் உள்ளது. தேர்தல் நெருங்கிய நிலையில், ெபாதுமக்கள் பல்வேறு குறைகளை கலெக்டரிடம் நேரடியாக தெரிவிக்க வாய்ப்புள்ளது. எனவே, மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தை மீண்டும் கலெக்டர் அலுவலகத்தில், கலக்டர் தலைமையில் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ராஜூ அந்த மனுவில் கூறியுள்ளார்.

Tags : grievance meeting ,Collector ,
× RELATED மக்கள் குறைதீர் கூட்டத்தில் பள்ளி...