×

ஊட்டியில் காலநிலை மாற்றம் பகலில் நிலவும் குளிரால் சுற்றுலா பயணிகள் அவதி

ஊட்டி,ஜன.19: கடந்த இரு நாட்களாக ஊட்டியில் பகலில் வெயில் அடித்த போதிலும், காற்று வீசி வருவதால் குளிர் வாட்டி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களாக மேக மூட்டம் மற்றும் சாரல் மழை காண்பபட்டது. கடந்த மாதம் ஓரிரு நாட்கள் லேசான உறைபனி காணப்பட்ட போதிலும், இதுவரை பனிப்பொழிவு தீவிரமடையாமல் உள்ளது. பொதுவாக ஜனவரி மாதம் உறைபனி கொட்டி பெரும்பாலான பகுதிகளில் காஷ்மீர் போன்று காட்சியளிக்கும். கடந்த வாரம் முழுக்க மழை பெய்த நிலையில், கடந்த இரு நாட்களாக காலநிலையில் மாற்றம் ஏற்பட்ட வெயில் அடித்து வருகிறது. எனினும், காற்றும் வீசி வருவதால் குளிர் அதிகமாக காணப்படுகிறது. இதனால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். காற்றின் காரணமாக குளிர் காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் போன்ற நோய்கள் பொதுமக்களை தாக்கி வருகிறது. ஊட்டியில் நேற்று அதிகபட்சமாக 19 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 6 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவாகியிருந்தது. மேலும், இரு நாட்களாக வெயில் காணப்படும் நிலையில், ஓரிரு நாட்களில் உறைபனி கொட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Climate change ,Ooty Tourists ,
× RELATED வாக்காள பெருமக்களே என்ற வார்த்தை...