யானைகளால் வீடு சேதம்

பந்தலூர்,ஜன.19: பந்தலூர் அருகே பிதர்காடு வனச்சரகம் அய்யன்கொல்லி அருகே தட்டாம்பாறை பகுதியில் நேற்று முன்தினம் காட்டு யானைகள் புகுந்து அப்பகுதியில் வசித்து வந்த கூலித்தொழிலாளி ஜோதி என்பவருடைய வீட்டின் அருகே இருந்த பாக்கு மரங்களை உடைத்து தின்று சேதம் செய்தது.வீட்டின் அருகே இருந்த பாக்கு மரத்தை உடைத்ததில் கூரையில் விழுந்ததில் சிமெண்ட் சீட்டுகள் உடைந்து வீடு சேதம் அடைந்தது. யானைகளால் சேதம் அடைந்த வீட்டிற்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் வனத்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். குடியிருப்பு பகுதியில் நுழைந்து அட்டகாசம் செய்யும் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories:

>