ஊட்டி - கூடலூர் சாலையில் தலைகுந்தாவில் புதிய பாலம் கட்டும் பணி துவக்கம்

ஊட்டி,ஜன.19:  ஊட்டியில் இருந்து கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் தற்போது பல்வேறு பகுதிகளிலும் சாலை விரிவாக்கம், சீரமைப்பு மற்றும் பாலம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டி.ஆர்.பஜார் பகுதியில் மிகவும் குறுகிய, அதேசமயம் பழமை வாய்ந்த சிறிய பாலம் உள்ளது. இதில், வாகனங்கள் செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றன. ேமலும், இடியும் தருவாயில் இருந்தது. இந்நிலையில், இந்த பாலத்தை அகற்றிவிட்டு அப்பகுதியில் புதிய பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. ஓரிரு மாதங்களில் இப்பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊட்டி - கூடலூர் சாலையில் தலைகுந்தா பகுதியில் பாலம் ஒன்று உள்ளது. காமராஜ் சாகர் அணைக்கு தண்ணீர் செல்லும் நீரோடை மீது இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.

இதில், மழைக்காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவது மட்டுமின்றி, சிறிய வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால், இப்பாலத்தை உயரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து, தற்போது தலைகுந்தா பகுதியில் உள்ள பழைய பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இதற்காக, தற்போது உள்ள பாலத்தின் அருகே தற்காலிக பாலம் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாலத்தை ஒட்டியுள்ள ஆர்டிஓ., வரி வசூல் அலுவலகம் உள்ளிட்டி சில கட்டிடங்களை அப்பகுதியில் இருந்து மாற்றவும் தேசிய நெடுஞ்சாலைத்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது. புதிய பாலம் கட்டுமான பணிகள் ஓரிரு நாட்களில் துவக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தலைகுந்தா பகுதியில் மழை பெய்தால், தண்ணீர் தேங்கி வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்ல முடியாமல் இருந்த நிலையில், தற்போது புதிய பாலம் கட்டுமான பணிகள் துவக்கியுள்ளது அப்பகுதி மக்களிடத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>