ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் எடுக்க சென்றவரை தாக்கிய 2 பேர் கைது

கோவை, ஜன.19: கோவை குரும்பபாளையம் அருகேயுள்ள திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சக்திவேல் (35). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் மதுக்கரை மார்க்கெட் அருகே உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க முயன்றார். பணம் வராத நிலையில் ஏற்கனவே அங்கே வந்த 2 பேரிடம், பணம் வந்ததா? என விசாரித்தார். அப்போது அவர்கள் அவரிடம் வாக்குவாதம் செய்து தகாத முறையில் பேசியுள்ளனர். இதை சக்திவேல் கண்டித்தார். கோபமடைந்த அவர்கள் கல் வீசி தாக்கினர். இதில் சக்திவேலுக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது. அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு ெசய்து சுகுணாபுரம் செந்தமிழ் நகரை சேர்ந்த அப்துல் அஜீஸ் (19), மதுக்கரை மார்க்கெட் காந்திஜி தெருவை சேர்ந்த மகேஷ்குமார் (22) ஆகியோரை கைது செய்தனர்.

Related Stories:

>