மது, லாட்டரி விற்ற 5 பேர் கைது

ஈரோடு, ஜன. 19:அந்தியூர், நெரிஞ்சிப்பேட்டை பஸ் ஸ்டாப்பில் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக நேற்றுமுன்தினம் அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து போலீசார் அங்கு சோதனை நடத்தியதில் லாட்டரி விற்ற நெரிஞ்சிப்பேட்டையை சேர்ந்த சொக்கப்பன்(30) என்பவரை கைது செய்தனர். இதே போல சித்தோடு போலீசார் நடத்திய ரெய்டில் சித்தோடு தெலுங்கு செட்டியார் வீதியை சேர்ந்த விமல்(36) என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோடு பெரியார் நகர் ஆர்ச் அருகில் மதுவிற்பனை செய்ததாக ஈரோடு கல்லுக்கடை மேடு, ஜீவானந்தம் சாலையை சேர்ந்த சுரேஷ்(31), கவுந்தப்பாடி செரயாம்பாளையத்தை சேர்ந்த மதியழகன்(34), அந்தியூர் அடுத்துள் பர்கூர் தாமரைக்கரை, ஈரெட்டியை சேர்ந்த அருள்மணி(54) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஏராளமான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories:

>