வாகனம் மோதி வாலிபர் பலி

திருவில்லிபுத்தூர், ஜன.19: சங்கரன்கோவில் வடக்கு ரத வீதியை சேர்ந்த ராம்குமார்(35). இவர் சங்கரன்கோவிலில் இருந்து விருதுநகருக்கு துக்க நிகழ்ச்சிக்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோயில் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் கல்லூரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராம்குமார் திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வழியில் உயிரிழந்தார். கிருஷ்ணன்கோயில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ராம்குமார் மீது மோதிய வாகனத்தை தேடி வருகின்றனர்.

Related Stories:

>